சுவிட்சர்லாந்தில் எக்கச்சக்கமாக அதிகரித்துவரும் வீட்டு வாடகை!

 சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகைகள் கணிசமாக அதிகரித்துவருகின்றன.

அதிகரித்துவரும் வீட்டு வாடகை 

குறிப்பாக, Zug மாகாண மக்கள் 2020இலிருந்து வாடகைகள் எக்கச்சக்கமாக அதிகரித்துவருவதாகத் தெரிவித்துள்ளனர்.

2020ஐ ஒப்பிடும்போது, சில இடங்களில் வீட்டு வாடகை 30 சதவிகிதம் வரையும், சில இடங்களில் 40 சதவிகிதம் வரையும் அதிகரித்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

புதிதாக வரும் பணக்காரர்கள் என்ன வாடகையும் கொடுக்கத் தயாராக இருப்பதால், அவர்களால் வாடகை மேலும் அதிகரித்துவருவதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கிறார்கள்.


Jose Cendon/Bloomberg

விடயம் என்னவென்றால், வாடகைக்கு கிடைக்கும் வீடுகளின் எண்ணிக்கையோ மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. 

நடுத்தர வர்க்க மக்கள் இந்த வாடகை உயர்வால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

அத்துடன், வீடுகள் விலையும் அதிகமாகியுள்ளது. சமீபத்திய ஆய்வொன்றில், வீடுகள் விலை ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, சூரிக்கில், ஒரு குடும்பம் மட்டும் வாழத்தக்க வீடுகள் விலை, மூன்று மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளுக்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form