100வது டெஸ்டில் 100 ஓட்டங்கள்! வரலாறு படைத்த ரஹீம்!

 வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் சதம் விளாசினார். 


முஷ்பிகுர் ரஹீம்

டாக்காவில் அயர்லாந்து மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.


வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸின் இரண்டாவது நாளில் தற்போதுவரை 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 387 ஓட்டங்கள் குவித்துள்ளது.


லித்தன் தாஸ் (Litton Das) 103 ஓட்டங்களுடனும், மெஹிதி ஹசன் மிராஸ் 30 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.


முஷ்பிகுர் ரஹீம் (Mushfiqur Rahim) 214 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


இதன்மூலம், 100வது டெஸ்டில் சதம் அடித்த முதல் வங்காளதேச வீரர் மற்றும் சர்வதேச அளவில் 11வது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.  


100வது டெஸ்டில் சதம் அடித்தவர்கள்

கோலின் கௌட்ரே (இங்கிலாந்து) - 104 ஓட்டங்கள்

ஜாவீத் மியாண்டட் (பாகிஸ்தான்) - 145 ஓட்டங்கள்

கோர்டன் கிரீனிட்ஜ் (மேற்கிந்திய தீவுகள்) - 149 ஓட்டங்கள்

அலெக் ஸ்டீவர்ட் (இங்கிலாந்து) - 105 ஓட்டங்கள்

இன்ஸமாம்-உல்-ஹக் (பாகிஸ்தான்) - 184 ஓட்டங்கள்

ரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா) - 120 மற்றும் 143 ஓட்டங்கள்

கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா) - 131 ஓட்டங்கள்

ஹஷிம் ஆம்லா (தென் ஆப்பிரிக்கா) - 134 ஓட்டங்கள்

ஜோ ரூட் (இங்கிலாந்து) - 218 ஓட்டங்கள்

டேவிட் வார்னர் (அவுஸ்திரேலியா) - 200 ஓட்டங்கள்

முஷ்பிகுர் ரஹீம் (வங்காளதேசம்) - 106 ஓட்டங்கள் 




Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form