தெற்கு கடற்கரையில் போதைப்பொருளுடன் சிக்கிய பல நாள் மீன்பிடி படகு

 இலங்கையின் தெற்கு கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது.


அந்தக் படகில் பயணித்த ஆறு பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 பெருமளவு போதைப்பொருள் கடத்தல்

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பாதுகாப்பின் கீழ் குறித்த படகு தற்போது கரைக்கு அழைத்து வரப்பட்டுக்கொண்டிருக்கிறது.


இந்தக் படகு மூலம் பெருமளவு போதைப்பொருள் கடத்தப்படவிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.


கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் படகு தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form