தடை செய்யப்பட்ட பிரமிட் யோசனை திட்டத்தின் கீழ் செயற்பட்ட 22 நிறுவனங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவித்தல் விடுத்துள்ளது.
திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்த விசாரணைகளுக்கு பின்னர் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மேலும் 21 நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட நிறுவனங்காக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags
இலங்கை
